சென்னை மாநகராட்சி பட்ஜெட் ஏப்ரல் 9-ஆம் தேதி தாக்கல்
2022 -23ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் ஏப்ரல் 9ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது
சென்னை:
சென்னை மாநகராட்சிக்கு மேயர், துணை மேயர் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்று கொண்டனர். மேயராக பிரியாவும் துணை மேயராக மகேஷ்குமாரும் மற்றும் கவுன்சிலர்களும் தனித்தனியாக பதவி ஏற்றனர்.
இந்நிலையில் 2022 -23ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் ஏப்ரல் 9ம் தேதி மாமன்றத்தில் காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது .
மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்கிறார் .பட்ஜெட் மீதான விவாதமும் அன்றே நடைபெற உள்ளது .இறுதியில் 2022-23ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்திற்கான ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
Related Tags :
Next Story