தமிழக முழுவதும் சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்....!


தமிழக முழுவதும் சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்....!
x
தினத்தந்தி 5 April 2022 11:30 AM IST (Updated: 5 April 2022 12:57 PM IST)
t-max-icont-min-icon

சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழக முழுவதும் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை,

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரி 25 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் நிர்பந்தம் காரணமாகவே சொத்து வரி உயர்த்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசின் எந்த நடவடிக்கைக்கு எதிராக அதிமுக சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக தலையை அறிவித்தது.

அதன்படி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றது. அந்த வகையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகின்றது.

சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று  ராமநாதபுரம், வேலூர்,  திருவள்ளூர், மதுரை போன்ற மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள்  தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்து வருகின்றது.  

Next Story