தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்


தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 5 April 2022 1:38 PM IST (Updated: 5 April 2022 1:38 PM IST)
t-max-icont-min-icon

தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்


சென்னை

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ; 

உள் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல   கீழடுக்கு 
 சுழற்சி மாற்று வெப்பசலனம் காரணமாக தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் .அதிகபட்ச  வெப்பநிலை 27 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்க வாய்ப்பு என சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Related Tags :
Next Story