உலகின் மிக உயரமான முருகன் சிலைக்கு இன்று குடமுழுக்கு
சேலம், புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில் உலகிலேயே உயரமான முத்துமலை முருகன் சிலை அமைக்கப்பட்டுளள்து
சேலம்,
சேலம், புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில் உலகிலேயே உயரமான முத்துமலை முருகன் சிலை அமைக்கப்பட்டுளள்து . 146 அடி கொண்ட முருகன் சிலைக்கு இன்று குடமுழுக்கு நடைபெறுகிறது
முருகன் சிலைக்கு ஹெலிகாப்டர் மூலமாக மலர் தூவ கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது
முத்துமலை முருகன் சிலை 3 ஆண்டுகளாக திருப்பணி நடைபெற்று வந்த நிலையில், முழு பணிகளும் முடிவடைந்த நிலையில் இன்று குடமுழுக்கு நடைபெறுகிறது .
சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி, மலேசிய பத்துமலை முருகன் சிலையை விட 6 அடி உயரமாக, 146 அடி உயரத்தில் முத்துமலை முருகன் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
மலேசிய நாட்டின் பத்துமலையில் 140 அடி உயரத்தில் முருகன் சிலையை வடிவமைத்த. தமிழகத்தை சேர்ந்த திருவாரூர் தியாகராஜன் ஸ்தபதி குழுவினர் புதிய மைல்கல்லாக 146 அடி உயர முருகன் சிலையை தற்போது வடிவமைத்துள்ளனர்.
Related Tags :
Next Story