தமிழக சட்டசபையில் துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் தொடக்கம்


தமிழக சட்டசபையில் துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் தொடக்கம்
x
தினத்தந்தி 6 April 2022 11:22 AM IST (Updated: 6 April 2022 1:14 PM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டசபையில் துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது.

சென்னை,

தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18-ந் தேதி 2022-2023-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் (19-ந் தேதி) வேளாண் பட்ஜெட் தாக்கலானது. 

இந்த நிலையில், பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டுகள் மீதான விவாதம் 21-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடந்து முடிந்தது.

இந்நிலையில், தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது. அதில், துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. முன்னதாக கேள்வி நேரமும் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அந்த வகையில் வருவாய்த்துறை மந்திரி கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் பேசுகையில், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை விரைவில் தனி தாலுக்காவாக செயல்பட தொடங்கும். 3 லட்சம் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

வேளாண்துறையில் உள்ள காலி பணியிடங்கள் குறித்து உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், வேளாண்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

அதேபோல், தொழிற்பூங்கா நிலம் கையகப்படுத்தல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விவசாயிகள் பாதிக்காத வகையில் தொழிற்பூங்காக்களுக்கு நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

மீன்பிடி துறைமுகம் தொடர்பாக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ராமேஸ்வரத்தில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது’ என்றார்.

இதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். இன்று தொடங்கிய கூட்டத்தொடர், மே 10ம் தேதி வரை நடைபெறுகிறது.



Next Story