தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கவே துபாய் சென்றேன்-முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்


தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கவே துபாய் சென்றேன்-முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
x
தினத்தந்தி 6 April 2022 12:22 PM IST (Updated: 6 April 2022 3:19 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கவே துபாய் சென்றேன் என முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சென்னை: 

துபாயில் நடந்த உலக   கண்காட்சியில் இந்தியா, அமீரகம் உள்பட 192 நாடுகள் பங்கேற்றன. இவற்றின் சார்பில் அந்த வளாகத்தில் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டன. இந்த கண்காட்சியில் ‘தமிழ்நாடு தளம்' உருவாக்கப்பட்டது. 

தமிழ்நாடு அரங்கு மூலம் சர்வதேச அளவில் தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டது. இந்த அரங்கை தொடங்கி வைப்பதற்காக அரசு முறை பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றார். 

இந்த  பயணம் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில் ,தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கவே துபாய் சென்றேன் என முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்றைய தமிழக சட்டசபையில் இது குறித்து அவர் கூறுகையில் ;

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கவே துபாய்க்கு அரசு முறை பயணம் சென்றேன் .துபாய், அபுதாபி பயணத்தில் 14 ஒப்பந்தங்கள் மூலம் ரூ 6,100 கோடி முதலீடு ஈர்ப்பு, 12,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் .பல்வேறு மாவட்டங்களில் புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது 

துபாயில் உள்ள தமிழர்களை சந்தித்து, சொந்த மண்ணில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தேன் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் 

Next Story