எஸ்.ஐ. மீது ஆட்டோவை மோதியவர் கைது
சென்னையில் எஸ்.ஐ. மீது ஆட்டோவை மோதிவிட்டு நிற்காமல் சென்ற ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை,
சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், நேற்று இரவு கிண்டி-போரூர் டிரங்க் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த ஆட்டோவை அவர் மடக்கினார். ஆனால் அதிவேகமாக வந்த ஆட்டோ பொன்ராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் தூக்கி வீசப்பட்ட பொன்ராஜ்க்கு தலை மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற பொன்ராஜ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
இந்த நிலையில் எஸ்.ஐ. மீது ஆட்டோவை மோதிவிட்டு நிற்காமல் சென்ற ஓட்டுநர் சுதர்சனம்(வயது 65) என்பவரை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளிலும், மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ஒரு பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story