தமிழகத்தில் செங்கல் சூளைகளுக்கு மண் எடுக்க அனுமதி சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள செங்கல் சூளைகளுக்கு மண் எடுக்க அனுமதி அளிக்கப்படுவதாக சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார்.
சென்னை,
தமிழக சட்டசபையில் நேற்று நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்களின் விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் ஆற்றிய உரை வருமாறு:-
1989-ம் ஆண்டில் இருந்து தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இந்த துறையை என்னிடம்தான் கொடுத்திருக்கிறார்கள். தற்போது நீர்வளத்துறைதான் வேண்டும் என்று கேட்டேன். ஏனென்றால் இந்த துறை எனது உயிரோடு கலந்துவிட்டதாகவே நினைக்கிறேன்.
பலரும் சிற்றணை என்ற ‘செக் டேம்’ தேவை என்று பேசினார்கள். எனக்கும் அதைக் கட்ட ஆசைதான். ஆனால் நிதி அதிகம் ஒதுக்கப்படவில்லை. இந்த பட்ஜெட்டில்தான் நிதி ஒதுக்க வேண்டும் என்பது அல்ல. முதல்-அமைச்சர் நினைத்தால் பணத்துக்கு பஞ்சம் இருக்காது. ஆகையால்தான் முதலிலேயே, இந்த 5 ஆண்டுகளில் ஆயிரம் செக் டேம்கள் கட்டப்படும் என்று கூறியிருக்கிறேன்.
இந்த ஆண்டு 141 செக் டேம்கள் கட்டுவோம் என்று கடந்த ஆண்டு வாக்கு கொடுத்தேன். ஆனால் 6 மாத காலம் இயங்க முடியவில்லை. கொரோனா தொற்று பரவல், மழை வெள்ளம் போன்ற காரணங்களால் அதை நிறைவேற்ற முடியவில்லை. இப்போது நிறைவேற்றாவிட்டாலும் எனது நெஞ்சில் அந்த சபதம் இருக்கிறது. குறைந்தது ஒரு தொகுதிக்கு ஒரு செக் டேம் என்ற அளவில் கட்ட வேண்டும் என்பது எனது ஆசை.
கதவணை கடன்
புதிய அணைக்கட்டுகள் இல்லையே என்று பலர் பேசினர். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சியில் சுமார் 48 அணைகள் கட்டப்பட்டுள்ளன. ஆகையால் இப்போது அணை கட்ட இடமே இல்லை. எனவே ஆங்காங்கே இருக்கிற தண்ணீரை நிறுத்தி பயனடையச் செய்ய வேண்டும்.
கதவணை கட்ட வேண்டும் என்றும் கேட்டனர். அ.தி.மு.க. ஆட்சியிலும் கதவணை கட்டினீர்கள். அதை ரூ.4,383 கோடி கடன் வாங்கி கட்டினீர்கள். நபார்டில் என்.டி.ஏ. என்ற பிரிவு உள்ளது. அங்கு மீட்டர் வட்டிக்கு மேல் வட்டி போடுகிறார்கள். 7.8 சதவீத வட்டி என்ற வகையில் ஒரு மாதத்துக்கு ரூ.14 கோடியை இந்த அரசு கட்டுகிறது. எனவே, கொஞ்சம் குறைவாக வட்டி கொடுக்கிறவர்கள் யாராவது இருந்தால் பார்க்கலாம்.
செங்கல் சூளைக்கு மண்
கன்னியாகுமரி மாவட்டம் இப்போது ஆபத்தில் இருக்கிறது. ஏனென்றால் அங்கு மழை வந்து அனைத்தையும் அடித்துச் சென்றுவிட்டது. கால்வாய் எல்லாம் இப்போது மண்மேடாக மாறிவிட்டது. அவற்றை முழுக்க சீர்செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் கேட்டுள்ளேன். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். நெய்யாறு வழக்கில் நல்ல வக்கீலை அமர்த்தி நல்ல தீர்ப்பை வாங்கித்தருவோம்.
ஏரிகளில் தண்ணீரை கெடுப்பது சீமைக்கருவேல மரங்கள். முன்பு அமைச்சராக இருந்தபோதே இதற்காக நான் சண்டை போட்டேன். இன்று கருவேல மரங்களால் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. ஆகையால் இந்த மரங்களை அகற்ற ஒவ்வொரு தொகுதியிலும் எம்.எல்.ஏ.க்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வண்டல் மண் எடுப்பது பற்றி ஏற்கனவே முதல்-அமைச்சர் ஒரு உத்தரவு போட்டுள்ளார். செங்கல் சூளைக்கு மண் எடுப்பது பற்றி கேட்டிருக்கிறார்கள்.
(அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம் குறுக்கிட்டு, இது சம்பந்தமாக அ.தி.மு.க. ஆட்சியில் அரசாணை போடப்பட்டது. அந்த அரசாணையில் நீங்கள் திருத்தம் செய்து பிறப்பித்தீர்கள். ஆனால் மண்தான் எடுக்க முடியவில்லை. செங்கல் தொழில் என்பது ஒரு குடிசைத் தொழில். வண்டல் மண் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்).
முதல்-அமைச்சர் அனுமதியோடு இப்போதும் சொல்கிறேன், நிச்சயமாக உடனடியாக அந்த மண் விவசாயிகளுக்கும், செங்கல் சூளைக்காரர்களுக்கும் தரப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story