ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்கும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்
ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்கும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
சென்னை,
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே அவகாசம் இருக்கும் நிலையில், அதற்கு முன்பாக இளம் கல்வியியல் பட்டப் படிப்புக்கான (பி.எட்) முதலாமாண்டு தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதனால், பி.எட். பட்டப்படிப்பை நடப்பாண்டில் முடிக்கவுள்ள மாணவர்கள், இந்த தகுதித்தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு நினைத்தால் இந்த சிக்கலுக்கு எளிதில் தீர்வு காண முடியும். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான அவகாசத்தை இம்மாத இறுதி வரை நீட்டிப்பது, பி.எட் பட்டப் படிப்புக்கான தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிடுவது ஆகிய இரண்டில் ஒன்றை செய்தாலே இந்தச் சிக்கல் தீர்ந்துவிடும். அதை செய்வதில் சிரமும் இல்லை.
எனவே, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை இம்மாத இறுதி வரை நீட்டிக்க ஆணையிட வேண்டும். அதற்குள் பி.எட், தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Tags :
Next Story