பொங்கல் பரிசு வழங்கியதில் முறைகேடு: அமைச்சர்கள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


பொங்கல் பரிசு வழங்கியதில் முறைகேடு: அமைச்சர்கள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 7 April 2022 4:48 AM IST (Updated: 7 April 2022 4:48 AM IST)
t-max-icont-min-icon

தரமற்ற பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கியது தொடர்பான வழக்கிற்கு பதில் அளிக்க வேண்டும் என்று அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ.பெரியசாமி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,296 கோடி செலவில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. பரிசு தொகுப்பில் உள்ள பொருட்களை கொள்முதல் செய்ய நடந்த இ- டெண்டரில் முறையிலும் முறைகேடு நடந்துள்ளது.

பொங்கல் தொகுப்பில் இருந்த வெல்லம், கரும்பு, பருப்பு, புளி உள்ளிட்ட பொருட்கள் தரமற்றவையாக இருந்தது. அதில் உயிரிழந்த பூச்சிகள் காணப்பட்டது.

முதல்-அமைச்சர் உத்தரவு

இதுபோன்ற தரமற்ற பொருட்கள் வினியோகிப்பதால் மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. தரமற்ற பொருட்களை வினியோகம் செய்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். ஆனால், இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தரமற்ற பொருட்களை வழங்கிய அதிகாரிகள், அவற்றை தடுக்காத உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோருக்கு எதிராக லோக் ஆயுக்தா அமைப்பில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

நோட்டீஸ்

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், மனுவுக்கு லோக் ஆயுக்தா அமைப்பு, அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ.பெரியசாமி ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 10-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

Next Story