‘நீட்' தேர்வு ஜூலை 17-ந் தேதி நடக்கிறது: தேர்வுக்கான நேரம் அதிகரிப்பு
இளங்கலை மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வு வருகிற ஜூலை மாதம் 17-ந் தேதி நடக்க இருக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க மே மாதம் 6-ந் தேதி கடைசி நாளாகும். இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதுவதற்கான நேரம் 20 நிமிடம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்' நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் தமிழக அரசு அந்த ஓராண்டு மட்டும் விலக்கு பெற்று இருந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்று வரும் அனைத்து தேர்வுகளிலும் தமிழக மாணவர்கள் தொடர்ந்து பங்கு பெற்று வருகிறார்கள். இருப்பினும் தமிழக அரசு தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ஜூலை 17-ந் தேதி நடக்கிறது
இந்த நிலையில் 2022-23-ம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு வருகிற ஜூலை மாதம் 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவில் 543 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நடத்தப்பட இருப்பதாக தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) அறிவித்து உள்ளது. இந்த தேர்வுக்கு அடுத்த மாதம் (மே) 6-ந் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த அடுத்த மாதம் 7-ந் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஆண்டு 18 லட்சம் முதல் 20 லட்சம் பேர் வரை விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
20 நிமிடம் அதிகரிப்பு
தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் இந்த தேர்வை எழுத முடியும்.
கடந்த ஆண்டு நீட் தேர்வின் போது கொரோனாவை கருத்தில்கொண்டு 200 வினாக்கள் கொடுத்து 180 வினாக்களுக்கு பதில் அளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு புதிதாக தேர்வுக்கான நேரத்தை அதிகரித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. அதன்படி 20 நிமிடம் கூடுதலாக தேர்வு எழுத நேரம் வழங்கப்படுகிறது. தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு நிறைவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு www.nta.ac.in, https://neet.nta.nic.in என்ற இணையதளங்களில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Related Tags :
Next Story