"புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பது குறித்து ஆய்வு" - அமைச்சர் செந்தில் பாலாஜி


புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பது குறித்து ஆய்வு  - அமைச்சர் செந்தில் பாலாஜி
x
தினத்தந்தி 7 April 2022 6:36 AM IST (Updated: 7 April 2022 6:36 AM IST)
t-max-icont-min-icon

புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகம் முழுவதும் புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தமிழகம் முழுவதும் சீரான மின் விநியோகம் செய்வதற்கு ஏதுவாக, 193 புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்து 905 புதிய மின் மாற்றிகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும் சென்னை மாநகராட்சியின் 5 கோட்டங்களில் புதை வட மின்கம்பிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

Next Story