தூத்துக்குடி: புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்...!
ஆழ்வார்திருநகரியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தென்திருப்பேரை,
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் மாரியப்பன், ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி வெங்கடேசன் ஆகியோர் உத்தரவின் படி ஆழ்வார்திருநகரி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மாரியப்பன் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வன் தலைமையில் போலீசார் ஆழ்வார்திருநகரி பஜார் பகுதியில் உள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பஜார் பகுதியில் உள்ள ஒரு கடையில் சட்டவிரோதமாக புகையில் பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. ஏற்கனவே இந்த கடையில் பலமுறை புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து அதிகாரிகள் எச்சரித்து சென்று உள்ளனர்.
இந்த நிலையில் அதிகாரிகள் எச்சரிக்கையை மீறி புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மாரியப்பன் சீல் வைத்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது ஆழ்வார்திருநகரின் நாசரேத் ரோடு பகுதியில் வசிக்கும் முத்துக்குமார் (வயது 45) என்பர் இந்த கடையின் உரிமையாளரன் என்பது தெரியவந்து உள்ளது.
Related Tags :
Next Story