பள்ளிகளுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 7 April 2022 9:25 AM IST (Updated: 7 April 2022 9:25 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிகளுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

அரசு பள்ளிக்குச் சொந்தமான இடங்களில் தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளுக்கான இடங்களை அருகில் உள்ளவர்கள் ஆக்கிரமித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறைக்கு புகார் மனுக்கள் அனுப்பப்பட்டன.

இந்த நிலையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள கடிதத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை கண்டறிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அவ்வாறு செய்யப்பட்டுள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி பள்ளி பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story