இலங்கை தமிழர்களுக்கு உதவ முன்வந்த யாசகர்... அப்படி என்ன செய்தார்?
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் தமிழர்களுக்கு மதுரையை சேர்ந்த யாசகர் ஒருவர் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
மதுரை,
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் தமிழர்களுக்கு உதவி செய்திடும் வகையில் மதுரையை சேர்ந்த யாசகர் ஒருவர் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 20 ஆயிரம் ரூபாயை வழங்கியது நிகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த பாண்டி என்பவர் மதுரையில் வீதிகள் தோரும் யாசகம் பெற்று தனது அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகிறார். இந்த நிலையில், தான் பிச்சையெடுத்ததன் மூலம் கிடைத்த 20 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் தமிழர்களுக்கு உதவிட முன்வந்துள்ளார். அதன்படி, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 20 ஆயிரம் ரூபாயை வழங்கியுள்ளார்.
இதே போல கொரோனா காலத்திலும், தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 30 தடவைக்கும் மேல் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பாண்டி வழங்கியது குறிப்பிடத்தக்கது. யாசகர் பாண்டியின் இந்த செயல் அனைவரிடத்திலும் நிகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story