சென்னையில் 40.8 கி.மீ. நீளத்தில் மழைநீர் வடிகால் பணிகள் - நடப்பு நிதியாண்டில் நிறைவடையும் என தகவல்
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் இந்த நிதியாண்டிலேயே நிறைவடையும் என நகராட்சி கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் 184.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 40.8 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த பணிகள் நடப்பு நிதியாண்டிலேயே நிறைவடையும் என்றும் நகராட்சி நிர்வாகத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் கட்டமாக 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் திட்டம் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், பின்தங்கிய பகுதிகள், குடிசைப்பகுதிகளில் உள்கட்டமைப்பு இடைவெளிகளை நிரப்ப 975.84 கோடி ரூபாய் மதிப்பில் 1,293 திட்டங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாறு நதியின் 42 கி.மீ. தூரத்திற்கான சுற்றுச்சூழல் சீரமைப்பு பணிகள் 555 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த பணிகளை 2023 ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நகர்ப்புற நிர்வாகத்துறை தெரிவித்துள்ளது.
கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 165 ஏக்கர் பரப்பில் செம்மொழி பூங்கா அமைப்பதற்கான இறுதிக்கட்ட அறிக்கை ஜூலை 2022-ல் முடிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story