விபத்தில் மூளைச்சாவு அடைந்த விவசாயியின் உடல் உறுப்புகள் தானம்
விபத்தில் மூளைச்சாவு அடைந்த விவசாயியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவருடைய இதயம் தனி விமானம் மூலம் திருச்சியில் இருந்து சென்னைக்கு எடுத்துவரப்பட்டது.
திருச்சி,
அரியலூர் மாவட்டம் செந்துறை குழுமூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன்(வயது 55). விவசாயி. இந்நிலையில் கடந்த 4-ந்தேதி மாலை இளங்கோவன் மளிகை கடைக்கு சென்றுவிட்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்தார்.
திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று காலை மூளைச்சாவு அடைந்தார். இளங்கோவனின் மகன்கள் தங்களது தந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.
உடல் உறுப்புகள் தானம்
அதன்படி, இளங்கோவனின் இதயம் சென்னையில் தனியார் ஆஸ்பத்திரியில் உள்ள ஒரு நோயாளிக்கும், நுரையீரல் மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டது.
மேலும் அவருடைய 2 சிறுநீரகத்தில் ஒன்று திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிக்கும், மற்றொன்று நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிக்கும், இரு கண்களும் திருச்சியில் உள்ள கண் வங்கிக்கும் தானமாக வழங்க முடிவு செய்யப்பட்டது.
விமானத்தில் பறந்த இதயம்
இதற்காக நேற்று மாலை 4 மணிக்கு இளங்கோவனுக்கு உறுப்பு தான அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அவருடைய இதயத்தை சென்னையில் இருந்து வந்த தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் பெற்றுக்கொண்டனர். அவர்கள் அதை தனி விமானத்தில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு எடுத்துவந்தனர்.

Related Tags :
Next Story