"இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே 10.5% இடஒதுக்கீட்டை கொண்டு வரலாம்" - அன்புமணி ராமதாஸ்


இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே 10.5% இடஒதுக்கீட்டை கொண்டு வரலாம் - அன்புமணி ராமதாஸ்
x
தினத்தந்தி 8 April 2022 11:05 AM IST (Updated: 8 April 2022 11:05 AM IST)
t-max-icont-min-icon

"இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே 10.5% இடஒதுக்கீட்டை கொண்டு வரலாம்" என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.





சென்னை,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுப்ரீம் கோர்ட்டு வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து செல்லும் என்று தீர்ப்பளித்திருந்தது. இந்த நிலையில் சென்னை, தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான குழு சந்திப்பு நடத்தியது.

இந்த நிலையில் முதல் அமைச்சருடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

மீண்டும் இட ஒதுக்கீடுக்கு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று முதல் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். தேவையான தரவுகளை திரட்டி நடவடிக்கை எடுப்பதாக முதல் அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே 10.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வரலாம்.

வன்னியர் இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதகம் ஏற்படாது. தமிழக அரசு கோர்ட்டில் தரமான வக்கீல்களை வைத்துதான் வாதாடியது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story