சிதம்பரம் கோயிலில் போராட்டத்துக்கு தடை கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 8 April 2022 5:25 PM IST (Updated: 8 April 2022 5:25 PM IST)
t-max-icont-min-icon

புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், வழக்கு குறித்து தமிழக அரசு பதிலளிக்கவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கடலூர்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் நின்று தரிசனம் செய்ய அனுமதி கோரி ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி சிதம்பரத்தை சேர்ந்த  ராமநாதன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், தீட்சிதர்களை விரும்பாத ஒரு குழுவினர், தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதாகவும்,  கோவில் வளாகத்திற்கு அருகில் போராட்டம் நடத்தி பக்தர்களுக்கு இடையூறு விளைவிப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டது. 

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், வழக்கு குறித்து தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.


Next Story