"5 நிமிடம் கேள்வி கேட்டால் 50 நிமிடம் பதிலளிக்கிறார்கள்" - ஈ.பி.எஸ். அதிரடி குற்றச்சாட்டு


5 நிமிடம் கேள்வி கேட்டால் 50 நிமிடம் பதிலளிக்கிறார்கள் - ஈ.பி.எஸ். அதிரடி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 April 2022 9:06 PM IST (Updated: 8 April 2022 9:06 PM IST)
t-max-icont-min-icon

சட்டமன்றத்தில் நாங்கள் பேசுவதற்கு போதிய நேரம் கொடுக்கப்படுவதில்லை என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை,

எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது; சட்டமன்றத்தில் அதிமுக கட்சி பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. சட்டமன்றத்தில் எங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவதற்கு போதிய நேரம் கொடுப்பதில்லை.

எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுங்கட்சி உறுப்பினர்களிடம் 5 நிமிடம் கேள்வி கேட்டால், அதற்கு ஆளுங்கட்சி அமைச்சர்கள்  50 நிமிடம் பதிலளிக்கிறார்கள். எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசும் நேரத்தை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எடுத்துக்கொள்கின்றனர். இதனால், எங்களுக்கு சட்டசபையில் பேச நேரம் மறுக்கப்படுகிறது. 

எதிர்க்கட்சியாக இருக்கும் நாங்கள் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் தான் எழுப்ப முடியும். ஆனால், எங்களுக்கு சட்டமன்றத்தில் பேச்சுரிமை மறுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். 


Next Story