டி.டி.வி.தினகரன், நடிகர் செந்தில் மீதான வழக்கு ரத்து


டி.டி.வி.தினகரன், நடிகர் செந்தில் மீதான வழக்கு ரத்து
x
தினத்தந்தி 9 April 2022 4:37 AM IST (Updated: 9 April 2022 4:37 AM IST)
t-max-icont-min-icon

டி.டி.வி.தினகரன், நடிகர் செந்தில் மீதான வழக்கு ரத்து - ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

சென்னை அடையாறில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இல்லத்திற்கு முன்பாக நிருபர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் செந்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர், திருச்சி தொகுதியின் எம்.பி. குமார் குறித்து ஒருமையில் அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து, திருச்சி மத்திய குற்றப்பிரிவில் குமார் புகார் அளித்தார். அதில், டி.டி.வி.தினகரனின் தூண்டுதலின் பேரில்தான் நடிகர் செந்தில் தன்னை பற்றி அவதூறாக பேசியதாக கூறியிருந்தார். இதன்படி, நடிகர் செந்தில், டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, டி.டி.வி.தினகரனும், நடிகர் செந்திலும், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, இருவர் மீதான வழக்கையும் ரத்துசெய்து உத்தரவிட்டார்.

Next Story