ராமேஸ்வரத்தில் 3-வது நாளாக கோடை மழை...!
ராமேஸ்வரத்தில் தொடர்ந்து 3-வது நாளாக கோடை மழை பெய்தது.
ராமநாதபுரம்,
இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழையும், பலத்த மழையும் பெய்து வருகின்றது.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகாமா கணப்பட்டது. இதில் இருந்து தங்களை காத்து கொள்வதற்காக பொதுமக்கள் இளநீர், தர்பூசணி, பழச்சாறு போன்ற பாணங்கை அருந்தி வந்தனர். இந்த சூழ்நிலையில் மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழை கோடை வெயிலின் தாக்கத்தை தணித்தது.
அந்த வகையில் ராமேஸ்வரம் பகுதியில் தொடர்ந்து 3-வது நாளாக பலத்த கோடை மழை பெய்தது. இந்த மழையால் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்று காட்சி அளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தாலும், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story