சென்னை மாநகராட்சி பட்ஜெட்: வார்டு மேம்பாட்டு நிதி ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.35 லட்சமாக அதிகரிப்பு


சென்னை மாநகராட்சி பட்ஜெட்: வார்டு மேம்பாட்டு நிதி ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.35 லட்சமாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 9 April 2022 11:07 AM IST (Updated: 9 April 2022 11:54 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, சொத்து வரி உயர்வு குறித்து விவாதிக்க வலியுறுத்தி அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியின் வரவு-செலவு கணக்கான ‘பட்ஜெட்’ இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்த ‘பட்ஜெட்டுக்கான’ கூட்டம் சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்ற கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்துக்கு பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தலைமை தாங்கினார். 

துணை மேயர் மு.மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கலின்போது  திருக்குறள் வாசித்து மாமன்ற உரையை மேயர் ஆர்.பிரியா துவங்கினார். 

இதனிடையே சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, சொத்து வரி உயர்வு குறித்து விவாதிக்க வலியுறுத்தி அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 40.80 கி.மீ நீளத்திற்கு 184.67 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.

* நேர்மையான சிந்தனைகளை உருவாக்க பள்ளிகளில் பாலின குழுக்கள் அமைக்கப்படும்

* சென்னையில் வார்டு மேம்பாட்டு நிதி ரூ. 30 லட்சத்தில் இருந்து ரூ. 35 லட்சமாக அதிகரிப்பு

* 200 வார்டுகளுக்கு ரூ. 70 கோடி ஒதுக்கீடு.

* சொத்து வரி உயர்வு குறித்து விவாதிக்க வலியுறுத்தி அ.தி.மு.க கவுன்சிலர்கள் வெளிநடப்பு

* சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் 

Next Story