கரகத்துடன் தரையில் படுத்து எழுந்த பூசாரி... 3 மணி நேரம் விடாமல் கரகம் ஆடி வழிபாடு
கரகம் எடுத்து ஆடிய பூசாரி, கரகத்துடன் தரையில் படுத்து எழுந்தது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
கிருஷ்னகிரி,
ஓசூர் அடுத்த சூடாபுரம் கிராமத்திலுள்ள திரௌபதி அம்மன் கோவில் கரகத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
யுகாதியை ஒட்டி மூன்று நாட்களாக பச்சை கரகம், பூ கரகம், கலச கரகம் ஆகியவை எடுத்து ஆடும் நிகழ்வு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தலை மேல் கலசங்களை அடுக்கியபடி கரகம் எடுத்து ஆடிய பூசாரி, கரகத்துடன், தரையில் படுத்து எழுந்தது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
பூசாரி, 3 மணி நேரம் விடாமல் கரகம் ஆடினார். சூடாபுரம் மற்றும் பாகலூர் பகுதியில், கரகத்துடன் உலா வந்த பூசாரியை பக்தர்கள் வணங்கினர்.
Related Tags :
Next Story