கிரிவலப் பாதை தூய்மைப்படுத்தும் பணி - கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்


கிரிவலப் பாதை தூய்மைப்படுத்தும் பணி - கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 10 April 2022 7:15 AM GMT (Updated: 10 April 2022 7:11 AM GMT)

திருவண்ணாமலை கிரிவலப் பாதையை 2 ஆயிரம் பணியாளர்கள் கொண்டு தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு  சித்ரா பவுர்ணமி தினத்தன்று வரும் பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு இரண்டாயிரம் பணியாளர்கள் கொண்டு 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையை தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலனுக்காக கிரிவலப் பாதையை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையை 2 ஆயிரம் பணியாளர்கள் தூய்மைப்படுத்தி வருகின்றனர். 

மேலும் பக்தர்களின் வசதிக்காக கழிவறை, தடையில்லா மின்சாரம், குடிநீர் வசதிகள் போன்ற ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story