"இந்தியை திணிக்க முயற்சிக்க வேண்டாம், முதலில் பெட்ரோல் விலையை குறையுங்கள்" - தயாநிதி மாறன்
இந்தி மொழியை திணிக்க முயற்சிக்காமல், மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்துங்கள் என்று தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
இந்தி மொழியை திணிக்க முயற்சிக்காமல், மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்துங்கள் என்று மத்திய அரசை திமுக எம்.பி தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரு மொழிக்காக, இன்னொரு மொழியை ஒழிக்கின்ற நிலையை மாற்றுங்கள். தமிழ் மொழிக்கு என்ன குறை? செம்மொழியான எங்கள் மொழியை நாங்கள் வளர்க்கிறோம். நாங்கள் பேசுகிறோம் என்று கூறினார்.
நாட்டின் முக்கியமான பிரச்சனையாக இருக்கும் பெட்ரோல் விலையை முதலில் குறையுங்கள் என்று கூறிய அவர், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் கூட கட்டணம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் உக்ரைனில் சென்று மருத்துவம் படிக்கும் சூழல் உள்ளது. நீட் கொள்கையை கைவிடுங்கள் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Related Tags :
Next Story