காஞ்சிபுரத்தில் சர்வதேச அளவில் விளையாட்டு அரங்கம்- சபாநாயகர் அப்பாவு பேட்டி
காஞ்சிபுரத்தில் சர்வதேச அளவில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளதாக சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
சென்னை,
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:-
அகில இந்திய அளவிலான சதுரங்க போட்டியை நடத்துவது தமிழ்நாட்டின் பெருமை. உலக அரங்கில் தமிழ்நாடு சிறந்த இடத்தை பிடித்துள்ளது என்பதற்கு இது எடுத்துக்காட்டு ஆகும்.
காஞ்சிபுரத்தில் சர்வதேச அளவில் ரூ.700 கோடியில் மதிப்பில் 500 ஏக்கரில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா ஒரு விளையாட்டு மைதானத்தை ஏற்படுத்த முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.
இந்திய ஒருமைப்பாட்டை பேணுவதன் எடுத்துக்காட்டாக இருப்பதுதான் விளையாட்டு என்று கூறினார்.
Related Tags :
Next Story