"இல்லம் தேடி கல்வி திட்டம் 6 மாதம் நீட்டிப்பு" - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 10 April 2022 8:38 PM IST (Updated: 10 April 2022 8:38 PM IST)
t-max-icont-min-icon

இல்லம் தேடி கல்வி திட்டத்தை மேலும் 6 மாதம் நீட்டிப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை,

கொரோனா பேரிடர் காலத்தில் மாணவர்கள் கல்வி கற்பதில் ஏற்பட்ட பின்னடைவை ஈடுசெய்யும் வகையில் தமிழக அரசு இல்லம் தேடி கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வந்தது.

இந்த நிலையில் இல்லம் தேடி கல்வி திட்டம் மேலும் 6 மாத காலம் நீட்டிக்க இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். 

இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது:-

இந்த 2 ஆண்டுகளாக கொரோனா காலத்தில் இருக்கின்ற இந்த கற்றல் இடைவெளியை குறைக்கவும் பாடத்தில் இருக்கின்றது மட்டும் இல்லாமல் பொது அறிவும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முதல் அமைச்சரால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் 'இல்லம் தேடி கல்வி திட்டம்'. 

இதன்மூலம் கற்றல் இடைவெளியை சரிசெய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இன்னும் ஒரு 6 மாதகாலம் இதை நீட்டித்து முதல் அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, நிதி அமைச்சர் நிதிநிலை அறிக்கையிலே வெளியிட்டிருக்கிறார்கள். இதன்மூலம் இந்த கற்றல் இடைவெளியை சரிசெய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story