குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் யானை வழித்தடங்களில் நீதிபதிகள் குழு ஆய்வு
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில், 14 கொண்ைட ஊசி வளைவுகள் உள்ளன. குறுகிய மலைப்பாதையாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது.
ஊட்டி,
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில், 14 கொண்ைட ஊசி வளைவுகள் உள்ளன. குறுகிய மலைப்பாதையாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதை கருத்தில்கொண்டு, குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. ஆனால், யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து விரிவாக்க பணிகள் நடைபெறுவதாக புகார் எழுந்தது.
குறிப்பாக நந்தகோபால் பாலம் அருகே நடைபெறும் சாலை விரிவாக்க பணியானது, யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து நடைபெறுவதாக புகார் எழுந்தது தொடர்பாக, அதுகுறித்து மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.
இந்தநிலையில், நீலகிரி மாவட்டத்தின்சுற்றுச்சூழல் மற்றும் வன பாதுகாப்பு குறித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் சதீஷ்குமார், பாரதிதாசன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.
அவர்கள் நேற்று குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள யானைகள் வழித்தடங்களை ஆய்வு செய்தனர். அப்போது, வருவாய்த்துறை, வனத்துறை, நெடுஞ்சாலைத்துறைஅதிகாரிகள் உடனிருந்தனர்.
பின்னர், சாலை விரிவாக்க பணி நடைபெறும் நந்தகோபால் பாலம் அருகேயானைகள் கடந்து செல்ல போதுமான இடம் விடவில்லை, எனவே, போதிய இடம் விட்டு சாலை விரிவாக்க பணியை மேற்கொண்டு, அது தொடர்பாக அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Tags :
Next Story