அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான 4 வழக்குகள் ரத்து
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான 4 வழக்குகள் ரத்து - ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், தி.மு.க.வி.னர் மீது போலீசார் பொய் வழக்கு போடுவதாகவும் குற்றம் சாட்டி கடந்த 2020-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்துக்கு தற்போது மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். இதையடுத்து, செந்தில்பாலாஜி உள்பட பலர் மீது 4 வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, மனுதாரர் மீதான 4 வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story