தஞ்சை ரவுடி ராஜாவுக்கு தூக்கு தண்டனை: கும்பகோணம் கூடுதல் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு
தஞ்சை ரவுடி ராஜாவுக்கு தூக்கு தண்டனை விதித்தது கும்பகோணம் கூடுதல் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
கும்பகோணம்,
தஞ்சாவூரை சேர்ந்த பிரபல ரளடி ராஜாவுக்கு மரண தண்டனை விதித்து கும்பகோணம் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ராஜா என்ற கட்ட ராஜா மீது 10க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்த நிலையில், கைது செய்யப்பட்டு கும்பகோணம் அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். இந்த சூழலில் இந்த வழக்குகள் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி இன்று காலை தீர்ப்பு வழங்குவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை தீர்ப்பை வாசித்த நீதிபதி, ரவுடி ராஜாவுக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மற்றொரு குற்றவாளி செல்வத்திற்கு ஆயுள் தண்டனையுடன், ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ரவுடி ராஜா மீது கும்பகோணத்தில் 2013ல் செந்தில்நாதன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு உள்பட 16 கொலை வழக்குகள் உள்ளநிலையில், நீதிமன்றத்தால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story