ஈரோடு,கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் மொத்தம் 9 ஆற்றுப் பாலங்கள் - அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு


ஈரோடு,கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் மொத்தம் 9 ஆற்றுப் பாலங்கள் - அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு
x
தினத்தந்தி 12 April 2022 11:38 AM GMT (Updated: 12 April 2022 11:38 AM GMT)

ஈரோடு,கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் மொத்தம் 9 ஆற்றுப் பாலங்கள் ரூ.136.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறைக்கான அறிவிப்புகளை அத்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்.

அதன் விவரம் பின்வருமாறு:-

சென்னை மாநகரப் பகுதியில் கலங்கரை விளக்கம் முதல் கிண்டி வரை உயர்மட்ட சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட சாலை கட்டப்படும்.

செங்கல்பட்டு நகரத்தை திருச்சி, புதுக்கோட்டை, மானாமதுரை வழியாக தூத்துக்குடி துறைமுகத்துடன் இணைக்கும் துறைமுக சாலையை 4 வழி சாலையாக அமைக்க விரிவான திட்ட அறிக்கை ரூ.4 கோடியில் தயாரிக்கப்படும்

* மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், பசுமலையில் ரூ.26.33 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கப்படும்.

*தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு கடல்சார் பயிற்சி நிறுவனத்தின் தரத்தை நவீன வசதிகளுடன் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

* ஈரோடு,கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் மொத்தம் 9 ஆற்றுப் பாலங்கள் ரூ.136.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

*உதகமண்டலம் நகருக்கு மாற்றுப் பாதை ரூ.70 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

* 1076 கி.மீ நீளம் கொண்ட தமிழ்நாடு கடற்கரை பகுதிகளில் சாத்தியமான இடங்களில் குறைந்த தூர பயணிகள் படகு போக்குவரத்து. சாத்தியக்கூறு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டு நிலுவையில் உள்ள திட்டங்களுக்கும் திமுக ஆட்சியில் நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறோம்.

Next Story