ஆன்லைன் வழக்கு விசாரணையின்போது இளம்பெண்ணுடன் சல்லாபத்தில் ஈடுபட்ட வக்கீலுக்கு சிறை
ஆன்லைன் வழக்கு விசாரணையின்போது, இளம்பெண்ணிடம் சல்லாபத்தில் ஈடுபட்ட வக்கீலுக்கு 2 வார சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை,
கொரோனா ஊரடங்கின்போது, சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக விசாரிக்கப்பட்டது. அப்போது வக்கீல் சந்தானகிருஷ்ணன் என்பவர் ஆன்-லைன் விசாரணைக்காக ஆஜராகி இருந்தார்.
ஆனால், அவருக்கு முன்பு இருக்கும் கேமரா ‘ஆனில்' இருப்பதை கவனிக்காமல், ஒரு இளம் பெண்ணுடன் சல்லாபத்தில் ஈடுபட்டார். இதை ஆன்-லைனில் ஆஜராகியிருந்த அனைத்து வக்கீல்களும், பொதுமக்களும் பார்த்தனர்.
அவமதிப்பு வழக்கு
அதில் ஒருவர் அந்த சல்லாப காட்சியை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதன் அடிப்படையில், சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து, கோர்ட்டு அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ. நக்கீரன் ஆகியோர் விசாரித்தனர். பின்னர்,
இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அந்த காட்சியை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறியிருந்தனர்.
பெண்ணுக்கு இழப்பீடு
மேலும், இந்த வீடியோ வெளியானதால், பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண்ணுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி, அந்த பெண்ணுக்கு, சந்தானகிருஷ்ணன் இழப்பீடு வழங்கினார்.
அதேநேரம், ஐகோர்ட்டு உத்தரவின்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், வக்கீல் சந்தானகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவருக்கு சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கியது.
சிறை
இந்தநிலையில் இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் நேற்று தீர்ப்பு அளித்தனர்.
அதில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-
வக்கீல் சந்தான கிருஷ்ணனுக்கு 2 வாரங்கள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதிக்கிறோம்.
ஏற்கனவே, இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டு, அவர் 34 நாட்களாக சிறையில் இருந்துள்ளார்.
பாராட்டு
அந்த சிறையில் இருந்த காலத்தை, தண்டனை காலத்தில் கழித்துக்கொள்ள வேண்டும். இந்த வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாரை பாராட்டுகிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Related Tags :
Next Story