சட்டப்பேரவையில் எம்.ஜி.ஆர். பாடலை பாடிய அமைச்சர்...! தன்னைப் பார்த்து பாடுங்கள் என்ற சபாநாயகர் அப்பாவு...!
சட்டப்பேரவையில் மீன்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது.
சென்னை,
மீனவர்களின் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் துயரம் என எம்.ஜி.ஆர். படத்தின் பாடலை பாடிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனால் சட்டப்பேரவை கலகலப்பானது.
மீன்வளத்துறை மீதான மானியக் கோரிக்கையில் பதிலளித்து பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ண் மீனவர்களுக்கான நலத்திட்டம் உள்ளிட்டவைகளை பட்டியலிட்டார்.
அப்போது மீனவர்களின் நிலையை சொல்ல வேண்டும் என்றால் என்று பேசிய அவர் திடீரென “ஒருநாள் போவார், ஒருநாள் வருவார்; ஒவ்வொரு நாளும் துயரம்” என பாடினார். அப்போது குறிக்கிட்ட சபாநாயகர் அப்பாவு தன்னை பார்த்து பாடும் படி கோரினார். அதன்பிறகு பாட்டை முடித்து விடுங்கள் என அப்பாவு கூறினார்.
எம்.ஜி.ஆர். பாடலை பாடியதாக கேள்வி எழுப்பியவர்களுக்கு பாடல் வந்த நேரத்தில் திமுகவின் பொருளாளராக எம்.ஜி.ஆர் இருந்தார் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ண் பதில் அளித்தார்.
எம்.ஜி.ஆர். பாடலை பாடிய அமைச்சர் - தன்னைப் பார்த்து பாடுங்கள் என்ற அப்பாவு - கலகலப்பான சட்டப்பேரவைhttps://t.co/ztZxqq2qYz
— Thanthi TV (@ThanthiTV) April 13, 2022
Related Tags :
Next Story