ஹஜ் பயணத்துக்கு வருகிற 22-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்


ஹஜ் பயணத்துக்கு வருகிற 22-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 14 April 2022 2:37 AM IST (Updated: 14 April 2022 2:37 AM IST)
t-max-icont-min-icon

சவூதி அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஹஜ் பயணத்துக்கு வருகிற 22-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் சிறுபான்மையினர் நலத்துறை உத்தரவு.

சென்னை,

சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தின் தற்போதைய அறிவிப்பின்படி, இந்த ஆண்டில் ஹஜ் பயணம் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடைபெறும். குறிப்பாக, சவூதி அரேபியா அரசாங்கத்தின் சுகாதாரத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் செலுத்தப்பெற்ற, 65 வயதிற்கு உட்பட்டவர்கள் விமானம் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பி.சி.ஆர். பரிசோதனையில் நெகடிவ் என உறுதி செய்யப்பட்ட மருத்துவச் சான்று உடையவர்கள், பயணத்தின்போது, அனைத்து சுகாதாரம் சம்பந்தப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தவறாது கடைபிடிக்க வேண்டும் எனவும், சவூதி அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது என்று மும்பையிலுள்ள இந்திய ஹஜ் குழு தெரிவித்துள்ளது.

வருகிற 30-ந் தேதி அன்றுள்ளவாறு 65 வயதைக் கடந்தவர்கள் பயணத்திற்கு தகுதியற்றவராவார்கள். வருகிற டிசம்பர் மாதம் வரை செல்லத்தக்க வகையில் உள்ள பன்னாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள். 65 வயதை பூர்த்தி செய்யாததுடன், தடுப்பூசிகளை செலுத்தியவர்கள் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் வருகிற 22-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தற்போது, சவூதி அரசால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை கடைபிடிக்க விரும்பாதவர்கள், பயணத்துக்கான விண்ணப்பங்களை திரும்பப் பெறலாம் என்று பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளது.

Next Story