உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற ஒன்றரை வயது குழந்தை...!


உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற ஒன்றரை வயது குழந்தை...!
x
தினத்தந்தி 14 April 2022 9:00 AM IST (Updated: 14 April 2022 8:55 AM IST)
t-max-icont-min-icon

உலக சாதனை புத்தகத்தில் ஒன்றரை வயது குழந்தை சக்தி கந்தராஜ் இடம்பெற்று உள்ளார்.

கோவை,

கோவை இடையார்பாளையம் அன்பு நகரை சேர்ந்தவர் கீர்த்திக்குமரன். இவரது மனைவி சுகன்யா லட்சுமி. இவர்களின் 1 வயது 4 மாத குழந்தை சக்தி கந்தராஜ்.

குழந்தை சக்தி கந்தராஜ் தன் அபார நினைவாற்றலால் பழங்கள், காய்கறிகள், விலங்குகள் போன்ற 500-க்கும் மேற்பட்ட கற்றல் உதவி அட்டைகளை (பிளாஸ் கார்ஸ்) சரியாக சுட்டி காட்டி வியக்க வைத்து கலாம் உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்து உள்ளார். 

கலாம் உலக சாதனை புத்தகம் சார்பில் குழந்தை சக்தி கந்தராஜை பாராட்டி 'எக்ஸ்ட்ராடினரி கிரஸ்பிங் பவர் ஜெனியூன் கிட்' என்ற பட்டத்தை வழங்கி கவுரவித்து உள்ளது.

ஒன்றரை வயதில் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற குழந்தையை உறவினர்கள் பாராட்டி வருகின்றனர்.

Next Story