மீன்பிடி தடை காலம்: ராமேசுவரத்தில் கடற்கரையில் நிறுத்தப்பட்ட விசைப்படகுகள்...!


மீன்பிடி தடை காலம்:  ராமேசுவரத்தில் கடற்கரையில் நிறுத்தப்பட்ட விசைப்படகுகள்...!
x
தினத்தந்தி 14 April 2022 1:00 PM IST (Updated: 14 April 2022 12:52 PM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் மீன்பிடி தடை காலத்தை முன்னிட்டு விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்,

தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை பகுதியில் மீன் வளத்தை பாதுகாக்கும் வகையில் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடை காலமாக அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த தடை காலங்களில் மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரமாக உள்ள மீன்பிடி உபகரணங்களின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருவது வழக்கம்.

இந்த நிலையில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தை முன்னிட்டு ராமேசுவரம் மீன்பிடி துறை முககடல் பகுதியில் விசைப்படகுகளை மீனவர்கள் அணிவகுத்து நிறுத்தி வைத்து உள்ளனர்.


Next Story