ஆர்ப்பரித்து கொட்டும் திற்பரப்பு அருவியில் ஆனந்த குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்...!


ஆர்ப்பரித்து கொட்டும் திற்பரப்பு அருவியில் ஆனந்த குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்...!
x
தினத்தந்தி 14 April 2022 3:43 PM IST (Updated: 14 April 2022 3:43 PM IST)
t-max-icont-min-icon

திற்பரப்பு அருவில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்கின்றனர்.

திருவட்டார்,

தொடர் மழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குதூகலத்துடன் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

கடந்த 10 நாட்களாக மலைப் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் திற்பரப்பு அருவியின் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் பரந்து விரிந்து பாய்கிறது

அவ்வப்போது பெய்து வரும் மழை, மலைத் தொடரை தழுவும் மழை மேகங்கள், பச்சை பசேல் மரக்காடுகள் என திற்பரப்பு பகுதி ரம்மியமாக காட்சி தருகிறது.

சித்திரை முதல் நாளான இன்று குளிர்ச்சியாய் விழும் அருவித் தண்ணீரிலும், நீச்சல் குளத்திலும் சுற்றுலா பயணிகள் குதூகலமாய் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்

ஏராளமான வெளியூர் சுற்றுலா பயணிகள் தங்கி இருந்து காலை மாலை என தொடர்ந்து குளியல் போடுவதைக்காண முடிந்தது. இங்கு வருகை  தந்த சுற்றுல பயணிகள் அருவி எதிரில் உள்ள பூங்கா மற்றும் அலங்கார நீரூற்று ஆகியவற்றை பார்த்து ரசித்தனர். 

12 நாட்களுக்குப் பின் நேற்று திற்பரப்பு தடுப்பணையில் மீண்டும் படகு சவாரி துவங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் படகு சாவாரியும் செய்து மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகளின் வருகையால் அங்குள்ள கடைகளிலும் வியாபாரம் படு ஜோராக நடந்தது. மேலும் ஏராளமான பேருந்து, வேன், கார்களில் சுற்றுலா பயணிகள் வந்ததால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. 

Next Story