தூத்துக்குடி: விவசாயம் செழிக்க வேண்டி பொன் ஏர் திருவிழா...!


தூத்துக்குடி: விவசாயம் செழிக்க வேண்டி பொன் ஏர் திருவிழா...!
x
தினத்தந்தி 14 April 2022 4:15 PM IST (Updated: 14 April 2022 4:09 PM IST)
t-max-icont-min-icon

விவசாயம் செழிக்க வேண்டி விளாத்திகுளம் அருகே பொன் ஏர் திருவிழா நடந்தது.

எட்டயபுரம்,

விவசாயம் செழிக்கவேண்டும் என்பதற்காக சித்திரை மாதம் பிறந்ததும் விவசாயிகள் அனைவரும் ஒன்று கூடி பொன் ஏர் திருவிழா நடத்துவது கிராமப்புறங்களில் ஐதீகம். அதன்படி விளாத்திகுளம் அருகே சிங்கிலிபட்டி கல்குமி கிராமத்தில் பொன் ஏர் திருவிழா நடைபெற்றது.

இதில் சிங்கிலிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் செல்லக்குமார், கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன், வேளாண்மை இணை இயக்குனர் நாச்சியார், கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்த விழாவின் போது விவசாயிகள் தங்கள் வீட்டு வாசலில் குத்துவிளக்கு ஏற்றி விவசாய கருவிகளுக்கும், காளை மாடுகளுக்கும் சந்தனம், குங்குமம் வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.

பினனர், சூரிய வழிபாடு செய்து அலங்கரிக்கப்பட்ட காளை மாடுகளை கிழக்குத் திசையில் உள்ள பொது நிலத்தில் உழுது நவதானியங்களை விதைப்பு செய்தனர்.

இந்த பணிகளை முடித்து வீடு திரும்பிய விவசாயிகளை கிராம எல்கையில் மஞ்சள் நீர் ஊற்றி பெண்கள் வரவேற்றனர்.


Next Story