"கவர்னரின் தேநீர் விருந்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதால் செலவு மிச்சமாகும்" - அண்ணாமலை


கவர்னரின் தேநீர் விருந்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதால் செலவு மிச்சமாகும் - அண்ணாமலை
x
தினத்தந்தி 14 April 2022 5:47 PM IST (Updated: 14 April 2022 5:47 PM IST)
t-max-icont-min-icon

கவர்னரின் தேநீர் விருந்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதால் செலவு மிச்சமாகும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

சென்னை,

பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அம்பேத்கரின் பெயரை வைத்து தமிழ்நாட்டில் பல அரசியல் கட்சிகள் அரசியல் செய்து வருகின்றனர். ஆனால், அவரது தத்துவத்திற்கு எதிராக செயல்பட்டுகின்றன. 

பாஜகவின் நோக்கம் அம்பேத்கரை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதுதான். அம்பேத்கரின் சித்தாந்த வாரிசாக பாஜக உள்ளது. அம்பேத்கர் சொன்னதற்கு எதிராக விசிகவினர் செயல்படுகிறார்கள் என்று கூறினார்.

அதனை தொடர்ந்து தேனீர் விருந்து புறக்கணிப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கவர்னரின் தேநீர் விருந்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதால் தேனீர் செலவு மிச்சமாகும் என அண்ணாமலை பதில் அளித்தார்.

Next Story