விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 April 2022 10:00 PM IST (Updated: 14 April 2022 10:00 PM IST)
t-max-icont-min-icon

திருபுவனை பனை மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம்-நாகப்பட்டினம் சாலை விரிவாக்கப் பணி தற்போது நடைபெற்று வருகி்றது. இதற்காக திருபுவனை ஏரிக்கரையில் உள்ள சுமார் 700 பனை மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. 
இந்த கோரிக்கைக்காகவும் நீர் நிலைகளை பாதுகாக்க கோரியும் திருபுவனையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தொகுதி செயலாளர் ஈழவளவன் தலைமை தாங்கினார். இதில் மருத்துவர் அணி மாநில செயலாளர் முரளிதரன், தமிழ்க்கனல், வணிகர் அணி சரவணன், வாணிதாசன், சிந்தனைச்செல்வன், விஜயன், விஜய சங்கர், சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story