அரசு ஆஸ்பத்திரிகளில் 1,583 ஆக்சிஜன் படுக்கைகள் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
தமிழ்நாட்டில் முதல்முறையாக ரூ.364 கோடி செலவில் அரசு ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவுகளில் 1,583 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட செவிலியர் கண்காணிப்பு மையங்கள், பன்முக உயர்தர தீவிர சிகிச்சை பிரிவுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை,
தமிழ்நாட்டில் முதல்முறையாக 266 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவில், சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி உள்பட 36 அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகள், 18 அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிகள் மற்றும் வட்டார அளவில் உள்ள 139 அரசு ஆஸ்பத்திரிகளில் அமைந்துள்ள தீவிர சிகிச்சை பிரிவுகளில் நவீன உபகரணங்களுடன் கூடிய 1,583 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட செவிலியர் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த சிகிச்சை பிரிவுகளில் உள்ள தீவிர சிகிச்சை படுக்கைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் முக்கிய உடலியக்க செயல்பாடுகள், தொடர்ச்சியாக மருத்துவ தரவுகள் வாயிலாக, நேரடியாக செவிலியர் கட்டுப்பாட்டு மையத்திலுள்ள கண்காணிப்பு திரையில் காட்சிப்படுத்தப்பட்டு, 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. இது தீவிர சிகிச்சையில் உள்ளவர்களின் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் காப்பாற்றப்படும்.
செங்கல்பட்டில் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம்
97 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 25 அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிகள் மற்றும் 18 அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிகளில் அமைக்கப்பட்டுள்ள 516 படுக்கைகளுடன் கூடிய பன்முக உயர்தர தீவிர சிகிச்சை பிரிவுகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதன்மூலம், இப்பிரிவுகளில் அமைக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சை படுக்கைகள் ஒவ்வொன்றுடனும் உயர்ரக மருத்துவக்கருவிகளான, மல்டிபாராமானிட்டர், பல்ஸ் ஆக்சிமீட்டர், சிபேப், இ.சி.ஜி., எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சிரிஞ் பம்ப், என்டோடிரக்கியல் கப் மானோ மீட்டர் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், இத்தீவிர சிகிச்சை படுக்கைகள் அனைத்தும் ஒருங்கிணைந்த மத்திய செவிலியர் கண்காணிப்பு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
அதனைத்தொடர்ந்து, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி அருகில் 2 லட்சத்து 93 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 65 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள உலகத் தரம் வாய்ந்த சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தை முதல்-அமைச்சர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இச்சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில், இயற்கை மருத்துவ சிகிச்சைகளான நீர் சிகிச்சை, அக்குபஞ்சர், அக்குபிரஷர், யோகா கிரியா சிகிச்சைகள், மண் சிகிச்சை போன்ற சிகிச்சைகளும், யோகா பயிற்சிகளும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும். மேலும், 100 மாணவர்கள் பயிலக்கூடிய ஐந்தரை ஆண்டு இளங்கலை மருத்துவப் பட்டப்படிப்பு மற்றும் 30 மாணவர்கள் பயிலக்கூடிய 3 ஆண்டு மருத்துவப் பட்ட மேற்படிப்புகளும் வழங்கப்படும்.
தாம்பரம் நெஞ்சக ஆஸ்பத்திரி
மேலும் தாம்பரம்- அரசு நெஞ்சக நோய் ஆஸ்பத்திரியில் 2 கோடியே 66 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நவீன சமையலறையை அவர் திறந்து வைத்தார்.
காஞ்சீபுரம் மாவட்டம், காரப்பேட்டை, அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் 16 கோடியே 87 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்கள் அறை மற்றும் சாய்தள வசதி திறக்கப்பட்டது..
அதைத்தொடர்ந்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை வாயிலாக 108 அவசரகால ஊர்தி சேவையை மேலும் செம்மைப்படுத்தும் விதமாக, திருவண்ணாமலை மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் சாலைப்பாதுகாப்பு மாதிரி வழித்தடத்தில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம்-2 நிதியின் கீழ் 5 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 20 எண்ணிக்கையிலான 108 அவசர கால ஊர்திகளின் சேவைகளை முதல்-அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story