திருமலை- திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னை தீவுத்திடலில் இன்று சீனிவாச திருக்கல்யாணம்
திருமலை- திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னை தீவுத்திடலில் சீனிவாச திருக்கல்யாண வைபவம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. விழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு திருப்பதி லட்டு, ஆப்பிள் வழங்கப்பட உள்ளது.
சென்னை,
திருமலை- திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னை தீவுத்திடலில் கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் 6-ந்தேதி அன்று சீனிவாச திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
14 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சென்னை தீவுத்திடலில் சீனிவாச திருக்கல்யாண வைபவத்தை நடத்துவதற்கு திருமலை- திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் விரிவான ஏற்பாடுகள் செய்தது.
அதன்படி சென்னை தீவுத்திடலில் இன்று (சனிக்கிழமை) இரவு 7 மணியளவில் சீனிவாச திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
திருப்பதியில் இருந்து உற்சவர் சிலை
விழா ஏற்பாடுகள் குறித்து திருமலை- திருப்பதி தேவஸ்தானத்தின் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) ஆலோசனைக்குழு உறுப்பினர் ஏ.ஜெ.சேகர்ரெட்டி கூறியதாவது:-
திருமலை- திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாட்டில் சென்னை தீவுத்திடலில் சீனிவாச திருக்கல்யாணம் இன்று வெகுவிமர்சையாக நடைபெறும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.
திருமலை-திருப்பதியில் இருந்து உற்சவர் சிலைகளும், 40 பட்டாச்சாரியார்களும், 100 வேதபண்டிதர்களும் வரவழைக்கப்பட்டு உள்ளனர். திருமலை-திருப்பதி கோவில் கோபுரம் போன்று திருக்கல்யாண வைபவ மேடை தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
தமிழக கவர்னர் பங்கேற்பு
சீனிவாச திருக்கல்யாண நிகழ்வில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, திருமலை- திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் சுப்பா ரெட்டி உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொள்கின்றனர். எனவே போலீசார் தரப்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
பக்தர்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம் ஆகும். இந்த நிகழ்வை காண்பதற்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். எனவே பக்தர்களுக்கு தேவையான குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் விரிவாக செய்யப்பட்டு உள்ளது.
ஆப்பிள், லட்டு
திருக்கல்யாண வைபவத்தை பக்தர்கள் தெளிவாக கண்டுகளிக்கும் வகையில் 14-க்கும் மேற்பட்ட பிரமாண்ட எல்.இ.டி. திரைகள் வைக்கப்பட்டு உள்ளன. பக்தர்கள் அனைவருக்கும் திருப்பதி லட்டு பிரசாதமாக வழங்கப்படும். மேலும் ஆப்பிள், மோர், தண்ணீர் பாட்டில்களும் இலவசமாக வழங்கப்படும்.
சென்னையில் பல்வேறு இடங்களில் இருந்து தீவுத்திடல் பகுதிக்கு அதிகமான அளவில் மாநகர பஸ் சேவை இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது. இந்த நிகழ்வுக்கு வருகை தரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாக்கோலம்
சீனிவாச திருக்கல்யாணத்தையொட்டி சென்னை தீவுத்திடல் பகுதி வண்ண விளக்கு களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இரவை பகலாக்கும் வண்ணம் பக்தர்கள் அமரும் இடங்களில் பிரமாண்ட விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் இன்று மாலை 4 மணி முதல் நிகழ்ச்சியில் முடியும் வரையில் இப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
நெரிசல் இன்றி பக்தர்கள் வரிசையாக செல்லும் வகையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு உள்ளனர். பாதுகாப்பு பணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட உள்ளனர்.
திருக்கல்யாணம் நிகழ்ச்சி நிரல்
திருமலை- திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நடக்கும் சீனிவாச திருக்கல்யாண உற்சவத்தையொட்டி இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணியிலிருந்து 5.30 மணி வரை வேதபாராயணமும், 5.30 மணியிலிருந்து 6 மணி வரை ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம், 6 மணியிலிருந்து 6.30 மணி வரை அன்னமய்யாவின் பாடல்கள், 6.45 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணன் தொடக்க உரையுடன் இரவு 7 மணிக்கு சீனிவாச திருக்கல்யாண உற்சவம் தொடங்குகிறது.

Related Tags :
Next Story