சென்னையில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம் - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு


சென்னையில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம் - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 17 April 2022 2:30 AM IST (Updated: 17 April 2022 2:30 AM IST)
t-max-icont-min-icon

பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க உற்சவர் சிலைகளுக்கு வெகு விமரிசையாக திருக்கல்யாணம் நடைபெற்றது.

சென்னை,

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை தீவுத்திடலில் 100-க்கும் மேற்பட்ட பண்டிதர்கள் முன்னிலையில் ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் நடைபெற்றது. 

இதனை முன்னிட்டு திருமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட உற்சவர் சிலைகளுக்கு பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க வெகு விமரிசையாக திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் வசதிக்காக வாகன நிறுத்துமிடம், கழிப்பிட வசதிகள் உள்ளிட்டவை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்பு பணிகளில் 3 ஆயிரம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். 

Next Story