இன்று ஈஸ்டர் பண்டிகை: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து


இன்று ஈஸ்டர் பண்டிகை: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
x
தினத்தந்தி 17 April 2022 3:40 AM IST (Updated: 17 April 2022 3:40 AM IST)
t-max-icont-min-icon

ஈஸ்டர் பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ளதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

டாக்டர் ராமதாஸ்

ஏசு பிரான் உயிர்த்தெழுந்ததை குறிக்கும் ஈஸ்டர் பண்டிகை கிறிஸ்தவர்களால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டவேண்டும் என்று போதித்தவரான ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 3-வது நாளில் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறிஸ்தவ சொந்தங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஏசுவின் உயிர்த்தெழுதல் நமக்கு சொல்லும் பாடங்கள் ஏராளம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது:-

சிலுவையில் அறையப்பட்டு மரணத்தை தழுவிய ஏசுபிரான் மீண்டும் உயிர்த்தெழுந்த நிகழ்வினையொட்டி, நோன்பில் இருந்து கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் திருநாள். ஏசுபிரான் போதித்த அன்பை மாறாமல் பின்பற்றுகின்ற கிறிஸ்தவ சகோதரர்களை மனம் திறந்து பாராட்ட விரும்புகிறேன். தமிழக காங்கிரஸ் சார்பாக ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Next Story