ஈரோடு: காரில் கடத்திய 33 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்...!-
ஈரோடு அருகே காரில் கடத்திய 33 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.
தாளவாடி,
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஆசனூர் மதுவிலக்கு சோதனைச் சாவடி முன்பு சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் நான்கு மூட்டைகளில் தடை செய்யப்பட்ட 33 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியைச் சேர்ந்த பக்ருதீன்(40) கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் இருந்து திருப்பூருக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கொண்டு செல்வதும் தெரியவந்தது.
பின்னர் அவரை கைது செய்த போலீசார் புகையிலை பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story