இரை தேடி சாலையை கடந்த புள்ளிமான் வாகனம் மோதி உயிரிழப்பு....!
மேலூர் அருகே இரை தேடி சாலையை கடந்த புள்ளிமான் வாகனம் மோதி உயிரிழந்து உள்ளது.
மேலூர்,
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அம்பலகரன்பட்டியில் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு எதிரே உள்ள சாலையை இன்று காலை 9 மணி அளவில் புள்ளிமான் ஒன்று கடக்க முன்று உள்ளது. அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் புள்ளிமான் மீது மோதியது.
இதில் அடிபட்டு சம்பவ இடத்திலே அந்த மான் இறந்து விட்டது. இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.
பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த வனவர் கம்பகுடியான், மற்றும் வன காப்பாளர் சரவணன் இறந்த மானின் உடலை கைப்பற்றி கால்நடை மருத்துவர் உதவியுடன் பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.
இந்த பகுதியில் உள்ள வெள்ளை மலையில் ஏராளமான புள்ளிமான்கள் வாழ்கின்றன. இந்த மான்கள் தண்ணீர் மற்றும் இரை தேடி காட்டை விட்டு வெளியே வரும்போது சாலையில் அடிபட்டு இறப்பது வழக்கமாக உள்ளதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனை தடுக்க வனத்துறையினர் மற்றும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story