தர்மபுரியில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தர்மபுரியில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தர்மபுரி மாவட்டம் பாலவாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், கரியப்பனஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி கணேசன் என்பவர் உயிரிழந்த செய்தியை கேட்டு மிகுந்த வேதனையுற்றேன்.
விவசாயி கணேசன் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் கணேசன் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கிட ஆணையிட்டுள்ளேன்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில் செயல்பட்டு வரும் இந்த திமுக அரசு என்னென்றும் விவசாயிகளுக்கு உற்ற தோழனாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story