தீரன் சின்னமலை சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை


தீரன் சின்னமலை சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 17 April 2022 2:51 PM IST (Updated: 17 April 2022 2:51 PM IST)
t-max-icont-min-icon

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஈரோடு,

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளையொட்டி இன்று ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த ஓடாநிலையில் தீரன் சின்னமலை மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.முக. சார்பில் இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவருடன் அதிமுக நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சுதந்திரபோராட்ட மாவீரர் தீரன் சின்னமலை 266-வது பிறந்த நாள் விழா மிக சிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சுதந்திர போராட்ட மாவீரர் தீரன் சின்னமலை பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட ஆணை பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் கொரோனா மற்றும் தேர்தல் விதிமுறைகள் காரணமாக இந்த நிகழ்வில் பங்கு பெற இயலவில்லை. இந்த ஆண்டு கொரோனோ வைரஸ் தொற்று இருந்தாலும், அரசு இன்று கட்டுப்பாடுகள் எல்லாம் நீக்கியுள்ளது.

அதன் காரணமாக இன்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுதந்திர போராட்ட மாவீரர் தீரன் சின்ன மலைக்கு புரட்சித்தலைவி அம்மா அமைத்த ஓடாநிலை மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கின்றோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story