கோழி இறைச்சியின் விலை அதிரடி உயர்வு..!
கிறிஸ்தவர்களின் தவக்காலம் முடிந்ததால் நெல்லையில் கோழி இறைச்சியின் விலை 280 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
நெல்லை,
கிறிஸ்தவர்களின் தவக்காலம் முடிந்ததால் நெல்லையில் கோழி இறைச்சியின் விலை 280 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கடந்த 40 நாட்களாக கிறிஸ்தவர்கள் தவக்காலத்தில் இருந்ததால் அசைவ உணவை தவிர்த்து வந்தனர். இதனால் அண்மை காலமாக கறிக்கோழியின் விலை 200 ரூபாய்க்கு கீழே இருந்தது.
இந்த நிலையில் நேற்றுடன் தவக்காலம் முடிந்து இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடுவதாலும், ஞாயிறு என்பதாலும் நெல்லையில் கறிக்கோழியின் விலை உயர்ந்துள்ளாது. நேற்றுவரை 180 ரூபாய்க்கு விற்பனையாக ஒருகிலோ கோழி இறைச்சி இன்று 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. புறநகர் பகுதிகளில் போக்குவரத்து செலவுகளை கணக்கிட்டு ஒருகிலோ இறைச்சி 280 ரூபாய்க்கு வரை விற்பனையாகிறது.
Related Tags :
Next Story